Saturday, July 5, 2008

சரித்திரம் சரிகிறதே!


காந்தி பிறந்தமண்
இரத்தக்கறை படியக் கிடக்கிறதே!
சாந்தி தவழ்ந்த மண்ணின்
சரித்திரம் சரிகிறதே!

தியாகத் தலைமுறையை
தீப்பந்தம் மறைக்கிறதே!
அபாயம் நீங்கி - நல்ல
அமைதியை மனம் நாடிடுதே!

கடவுளின் பெயராலே
கலகங்கள் நடக்கிறதே!
மதவெறி தலைதூக்கி
மனிதநேயத்தை அழிக்கிறதே!

விஞ்ஞான இரகசியங்கள்
விலைபேசப் படுகிறதே!
மெய்ஞான மடங்களிலே - தேசம்
மண்டியிட்டுக் கிடக்கிறதே!

அரசியல் கழிசடைகளால் - நாடு
அசிங்கமாகிப் போனதே!
சரித்திரச் சின்னங்கள்
சரிக்கப்பட்டு கொண்டிருக்கிறதே!

விருப்பு வீழ்கிறதே!
வெறுப்பு வளர்கிறதே!
அகிம்சை தளர்கிறதே!
இம்சை துளிர்க்கிறதே!

ஆக்கம்: இனியவன் ஹாஜி முஹம்மது

2 comments:

கிளியனூர் இஸ்மத் said...

இனியவன் நண்பா நலமா...?என்னை நினைவிருக்கிறதா...?இருபது காலம் நம்மை கடந்து எண்ணங்களில் சிந்தனைகளில் எத்தனையோ மாற்றங்களை ஏற்ப்படுத்தி கொண்டிருக்கிறது...இந்த உலகம்...
இணையதளம் மூலம் மறுபடியும் இணைவோம் சந்திப்போம் என்பதை ....சற்று முன் நிமிடம் வரை நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை...நீயும் தான்...அல்லவா...!

சில நிகழ்வுகளில் உம்மைப் பற்றி தோழர் இசாக்கிடம் நலம் விசாரித்ததுண்டு...அவர் தான் கூறினார் கத்தாரில் உமது காலம் கரைவதாக...

நண்பா... நீயும் உமது குடும்பத்தார்களும் நலமா..?

சென்ற மாதம் தான் வலைப்பூக்குள் வலம் வர தொடங்கி உள்ளேன்...
ஆழந்தெரியாக் கடலாக இருக்கிறது...
ஆழம் தெரியவில்லை யென்றாலும்
பிரிந்துப்போன ஆளைத் தெரிகிறதே...
வலைப்பூக்கு வாழ்த்துக்கள்....!

நண்பா வாரும் என் வலைப்பூக்கு...உம்மை வரவேற்க்கிறேன்

பின் தொடர்வோம்....

நண்பன்

கிளியனூர் இஸ்மத்

www.kiliyanur-ismath.blogspot.com

ThEnmozhi Afiya Haji said...

kavi.ismath,
kaalam nammai pirithu vaiththalum nam natpin uyir innum uyirOduthanE irukkiRathu.

vaanga.. vaanga..
kuRaikalai mudhalil ezhuthungaL. niRaikalai piRarkalidam sollungaL.
ungaL min madal matRum alaipEsi ennai anuppi vaikka mudiyumaa thOzharE!!!