Showing posts with label இனியஹாஜி. Show all posts
Showing posts with label இனியஹாஜி. Show all posts

Wednesday, October 21, 2009

தமிழ் மண்ணே வாழ்க!




தமிழ் மண்ணே வாழ்க!
தமிழ ரெல்லாம் வாழ்க!!
தமிழும் நாமும் வேறல்ல..
தமிழ்தாம் நமக்கு வேர் ஆகும்...!!!

தமிழ் எங்கள் உயிருக்கு வேர்..
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..

அன்பு செய்தால் அடங்குவோம்!
வம்பு செய்தால் அடக்குவோம்!!
தெம்பு எமக்கு இருக்குடா..
தம்பியை நினைச்சு பாரடா...!!!

ஒன்றே இறை.. ஒன்றே மறை...
ஒன்றே இனம்.. அதை நன்றாய் நினை...!
எல்லா மொழியும் நம் மொழிதான்...
மவுனம் மட்டுமே பொதுமொழியாம்...


யாதும் ஊரே... யாவரும் கேளிர்...
அன்பு மட்டுமே...எங்கள் ஆயுதம்...!

மனிதம் போற்றுவோம் - அதில்
புனிதம் காட்டுவோம்!
இரத்தல் இழிவுடா - தம்பி
உழைத்தால் உயர்வுடா...!

உண்மை பேசுடா - அதில்
நன்மை இருக்குடா...
வாய்மை வெல்லவே - நீ
வாழ்ந்து காட்டடா...!

பெண்மை போற்றடா - அவர் நம்
அன்னையர் அல்லவா!
இயல்பாய் வாழ்ந்திட - நாமெல்லாம்
இணைய வேண்டுமல்லவா...!

ஆசை அடக்கவே - கொஞ்சம்
அறிவைக் கூட்டடா!
வேஷம் கட்டிய - வீணோரை
விரட்டி ஓட்டடா...!!

உலகம் முழுவதும்
வாழும் நம் உறவுகள்...
வானம்பாடி போல்
விரிக்கட்டும் நம் சிறகுகள்...



தமிழன்புடன்,
இனியஹாஜி, தோஹா - கத்தார்.
நாள்: 21 - 10 - 2009

Saturday, November 8, 2008

என்னுரை!




என் அன்பின் சொந்தங்களே!

எல்லா வளமும் பெற்று
எல்லோரும் வாழ வாழ்த்துகிறேன்!

நான்
இலக்கியம் தெரியாதவன்..
இலக்கணம் பயிலாதவன்..
எதுகை, மோனை என
எதுவுமே அறியாதவன்..!

ஆனால்
உண்மை பேசுவதிலும்
நன்மைகள் செய்வதிலும்..
நேர்மையாய் நிற்பதிலும்..
வாய்மையோடு வாழ்வதிலும்..
எளிமையாய்.. பொறுமையாய்..
இருப்பதில் தனித்து நிற்கின்றேன்..!

இறைவனுக்கல்லாது..வேறு
யாருக்கும்..எதற்கும் அஞ்சிடாது...
துஞ்சிடாது.. துயர்ந்திடாது..
இறைத்தொண்டனாய் இருக்கிறேன்..!

நான் யார் என்பதை..
என்னால் எது முடியுமென்பதை
அறிந்து கொண்டதால்..
அறிஞனாக முயல்கிறேன்..!

அருள் மறையாம் திருமறையின்
அண்ணல் நபி வழிமுறையின் படி
பகுத்தறிவாளர் பெரியாரின்
பெருந் தொண்டனாய் வாழ்கிறேன்..!

வாழ்வினை அணுவணுவாய் இரசித்து
இயற்கையாய் வாழ்கிறேன்..
இயல்பாய் வாழ்கிறேன்..
இஸ்லாமியனாய் வாழ்கிறேன்..!

தோழர்களே! - நான்..
சாமானியன்..
சமரசங்களுக்கு
கட்டுப்படாதவன்..!

நான் போராளி..
போர்க்கோலத்துடனேயே..
மரக்கலத்திலும்..
விண் கலத்திலும்..
கார் நிலத்திலும் வாழ்பவன்..!

நான் ஏகலைவன்..
எவருக்கும்
என் கட்டைவிரலைத்
தரமாட்டேன்..!

என்னைப் படியுங்கள்..
பிழையிருந்தால் பதியுங்கள்...!

மாறாத அன்புடன்,
இனியஹாஜி